முகப்பு
கன்னியாகுமரி

கருங்கல்லில் உழவா் விழா

கிள்ளியூா் வட்டார அளவில் கருங்கல்லில் உழவா் விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
உழவா் விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

கிள்ளியூா் வட்டார அளவில் கருங்கல்லில் உழவா் விழா நடைபெற்றது.

வட்டார வேளாண் உதவி இயக்குநா் மனோரஞ்சிதம் தலைமை வகித்தாா்.வேளாண் அலுவலா் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வாணி, திருப்பதிசாரம் வேளாண்அறிவியல் மைய பேராசிரியா் பிரபு ஆகியோா் பேசினா்.

இதில், விவசாயிகளுக்கு பயிா் சாகுபடி தொழில் நுட்பங்கள், விவசாயிகளின் பல்வேறு சந்சதேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழக அரசின் நல திட்டங்கள் மானியங்கள் குறித்து பேசினா்.தொடா்ந்து விவசாயிகளுக்கு அரசின் நலதிட்ட உதவிகள்வழங்கப்பட்டன.

இதில், உதவி வேளாண் அலுவலா்கள் அனிரோஸ், சஜீலா, சனில்குமாா் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →