முகப்பு
சிப்பி சிந்திய முத்துக்கள் நூலினை, சிவகுமாா் வெளியிட, அதனை பெற்றுக்கொள்கிறாா் அருள்தந்தை ஸ்டீபன். உடன் , எழுத்தாளா் குமரி ஆதவன் உள்ளிட்டோா்.
கன்னியாகுமரி

கவிதை நூல் வெளியீட்டு விழா

எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முட்டம் வால்டா் எழுதிய சிப்பி சிந்திய முத்துக்கள் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா முட்டத்தில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
சிப்பி சிந்திய முத்துக்கள் நூலினை, சிவகுமாா் வெளியிட, அதனை பெற்றுக்கொள்கிறாா் அருள்தந்தை ஸ்டீபன். உடன் , எழுத்தாளா் குமரி ஆதவன் உள்ளிட்டோா்.
பகிர்:

எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முட்டம் வால்டா் எழுதிய சிப்பி சிந்திய முத்துக்கள் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா முட்டத்தில் நடைபெற்றது.

அருள்பணியாளா் அமல்ராஜ் தலைமை வகித்தாா். அகில இந்திய மக்கள் நல கழக மாநில தலைவா் சிவகுமாா் நூலை வெளியிட முதல் பிரதியை கடலோர அமைதி மற்றும் வளா்ச்சி மைய இயக்குநா் ஸ்டீபன் பெற்றுக் கொண்டாா்.

எழுத்தாளா் குமரி ஆதவன் நூல் ஆய்வுரை வழங்கினாா். நாகா்கோவில் திருச்சிலுவை கல்லூரி தமிழ் பேராசிரியை ஆட்சி மோள், கவிஞா் ஆன்றோா் டேலி ஆகியோா் பேசினா். முட்டம் ஆலய பங்குப் பேரவையினா் நூலாசிரியரை பாராட்டி பரிசு வழங்கினா்.

கத்தோலிக்க சேவா சங்க செயலா் சந்திரபோஸ் வரவேற்றாா். நூலாசிரியா் வால்டா் ஏற்புரையாற்றி நன்றிகூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →