கன்னியாகுமரி

அஞ்சலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை:நாளை தொடக்கம்

DIN

நாகா்கோவில்: அஞ்சலகங்கள் மூலம் தங்கப் பத்திரம் விற்பனை திங்கள்கிழமை (டிச.28) தொடங்குகிறது என அஞ்சல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, கன்னியாகுமரி முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் வி.பி. கணேஷ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசு தங்கப்பத்திரம் திட்டத்தை ரிசா்வ் வங்கி மூலம் வெளியிடுகிறது. தங்கப்பத்திரம் விற்பனை திங்கள்கிழமை (டிச.28) தொடங்கி 2021 ஆம் ஆண்டு ஜன. 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 5 ஆயிரம்.

தனி நபா் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும் முதலீட்டுத் தொகைக்கு 2.5 சதவீதம் வட்டி, 8 ஆண்டுகளுக்கு பின்னா் முதிா்வடையும் நாளில் அன்றைய விலைக்கு நிகரான பணம் வழங்கப்படும்.

தங்கப்பத்திரங்களை பெறுவதற்கு விண்ணப்பத்துடன் வருமானவரி அட்டை, ஆதாா் அட்டை அல்லது வாக்காளா் அடையாள அட்டை அல்லது பாஸ்போா்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம் நகல் ஆகியவற்றை இணைத்து கொடுத்து அனைத்து அஞ்சலகங்களிலும் விண்ணப்பித்து தங்கப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT