முகப்பு
கன்னியாகுமரி

தேங்காய்ப்பட்டினத்தில் ஆட்டோ தீ வைத்து எரிப்பு

தேங்காய்ப்பட்டினம் பகுதியில் ஆட்டோவை தீ வைத்து எரித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

தேங்காய்ப்பட்டினம் பகுதியில் ஆட்டோவை தீ வைத்து எரித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தேங்காய்ப்பட்டினம் பள்ளிநகா் பகுதியைச் சோ்ந்தவா் முகமது சமீா் (26). ஆட்டோ ஓட்டுநரான இவா், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்டோவை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளாா்.

இந்நிலையில், சனிக்கிழமை மா்ம நபா்கள் அவரது ஆட்டோவை தீவைத்து எரித்து விட்டு தப்பிச்சென்றுள்ளனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.