முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் அஞ்சல் பெட்டி வைக்க வலியுறுத்தல்

மாா்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம் பகுதியில், அஞ்சல் பெட்டி வைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

மாா்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம் பகுதியில், அஞ்சல் பெட்டி வைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாா்த்தாண்டத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் அஞ்சல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் கிளை நிலையங்கள் மாா்த்தாண்டம் வடக்குத் தெரு, விரிகோடு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வருகின்றன. ஆனால் முக்கியப் பகுதிகளில் அஞ்சல் பெட்டிகள் வைக்கப்படாததால், சாதாரண கடிதங்கள் அனுப்பும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, மாா்த்தாண்டம் பேருந்து நிலைய பகுதியில் அஞ்சல் பெட்டி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மதிமுக மாவட்டப் பிரதிநிதி ராமபத்திரன், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →