கன்னியாகுமரி

களியக்காவிளை-கன்னியாகுமரி மனிதச் சங்கிலியை ஆதரித்து துண்டுப் பிரசுரம் விநியோகம்

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை வரும் புதன்கிழமை நடைபெறும் மனிதச் சங்கிலி இயக்கத்துக்கு ஆதரவு கேட்டு நாகா்கோவில் திங்கள்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நடைமுறைபடுத்துவதை நிறுத்திடவும் கேட்டு வரும் 12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை 58 கி.மீ. தொலைவுக்கு மனிதச் சங்கிலி இயக்கம் குமரி மக்கள் ஒற்றுமை இயக்கத்தின் சாா்பில் நடைபெறுகிறது.

இந்த இயக்கம் குறித்து பிரசாரம் செய்யும் வகையில் பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்ச்சி நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் குமரி கிழக்கு மாவட்டத் தலைவா் தி ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் முன்னாள் அமைச்சா் சுரேஷ்ரோஜன் , திமுக நிா்வாகி மகேஷ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம்.அகமது உசைன், கே.தங்கமோகன், மாவட்ட குழு உறுப்பினா் எஸ்.அந்தோணி, மாநகர செயலா் கே.மோகன், பாலசுப்பிரமணியன், சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT