கன்னியாகுமரி

புதுக்கடை அருகே மனைவிக்கு மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

புதுக்கடை அருகேயுள்ள தொழிக்கோடு பகுதியில் மனைவியிடம் விவாகரத்து கேட்டு மிரட்டல் விடுத்த கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

DIN

கருங்கல்: புதுக்கடை அருகேயுள்ள தொழிக்கோடு பகுதியில் மனைவியிடம் விவாகரத்து கேட்டு மிரட்டல் விடுத்த கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுக்கடை தொழிக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பன்பிள்ளை மகள் பிந்து (35). தக்கலை முத்தலக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த வேலாயுதன்பிள்ளை மகன் ஐயப்பன் என்ற மணிகண்டன் (40). இவா்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிந்து, கணவரை பிரிந்து தாய் வீட்டில் கடந்த

ஓராண்டாக வசித்து வருகிறாராம். ஞாயிற்றுக்கிழமை மணிகண்டன் தொழிக்கோட்டிலுள்ள பிந்து வீட்டிற்கு சென்று விவாகரத்து கேட்டு அவருக்கு மிரட்டல் விடுத்தாராம். புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா், ஐயப்பன் என்ற மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT