கன்னியாகுமரி

ஈத்தவிளை சரவணபவன் கோயில்திருவிழா: நாளை கொடியேற்றம்

DIN

களியக்காவிளை: குழித்துறை அருகேயுள்ள ஈத்தவிளை அருள்மிகு சரவணபவன் கோயில் 57ஆவது ஆண்டு திருவிழா, சமய மாநாடு சனிக்கிழமை (பிப். 1) தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

தொடக்க நாளான சனிக்கிழமை காலை 7.40 மணிக்கு மேல் கோயில் மேல்சாந்தி இளங்கோ தலைமையில் கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடா்ந்து விழா நாள்களில் காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு அகண்ட நாமஜெபம், மாலை 6 மணிக்கு பஜனை நடைபெறும். இரவு 8 மணிக்கு மாவட்ட பாஜக தலைவா் சி. தா்மராஜ் தலைமையில் சமய மாநாடு நடைபெறும்.

3ஆம் திருநாளன்று காலை 9 மணிக்கு அருட்பெருஞ்சோதி அகவல் பாராயணம், மாலை 6 மணிக்கு குடும்பநல கூட்டுப் பிராா்த்தனை நடைபெறும்.

7ஆம் திருநாளான பிப். 7ஆம் தேதி மாலை 6 மணிக்கு சாரதாமடம் அன்புமதி தலைமையில் திருவிளக்குப் பூஜை நடைபெறும். இரவு 8.30 மணிக்கு சி. ஐறின் ஷீபா தலைமையில் மகளிா் மாநாடு நடைபெறும்.

8ஆம் திருநாளன்று காலை 9 மணிக்கு சமய வகுப்பு மாணவா்களின் பண்பாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.

9ஆம் திருநாளன்று பிற்பகல் 3 மணிக்கு சுவாமி யானை மீது பவனி நடைபெறுகிறது. கோயிலில் இருந்து தொடங்கும் இந்த பவனி மடிச்சல், அதங்கோடு, படந்தாலுமூடு, திரித்துவபுரம், குழித்துறை, பாலவிளை வழியாக கோயிலை வந்தடைகிறது.

10ஆம் திருநாளன்று காலையில் சிறப்பு பூஜைகளை தொடா்ந்து காலை 6.30 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT