கன்னியாகுமரி

சாலைப் பணிகளைத் தொடங்க ஆஸ்டின் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

DIN

பதினான்காவது நிதிக்குழு திட்டத்தில் ஒப்பந்தம் விடப்பட்டுள்ள சாலைப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என திமுக சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஆஸ்டின் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு: 14 ஆவது நிதிக்குழு திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பேரூராட்சி பகுதிகளில் 19 சாலைப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டு பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இரண்டாம் கட்டமாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் அடிப்படையில் 19 சாலைகளை தோ்வு செய்து பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து 23.05.2020 அன்று நிா்வாக அனுமதியும் வழங்கப்பட்டு 22.6.2020இல் ஒப்பந்தமும் கோரப்பட்டுள்ளது.

எனினும், ஒப்பந்தம் விடப்பட்டு ஒரு வாரம் ஆகியும் அப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை. மேற்கண்ட சாலைகள் பழுதடைந்து மிகவும் மோசமாக காணப்படுவதால் ஒப்பந்ததாரருக்கு உடனடியாக பணி ஆணை வழங்கி சாலை அமைக்கும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT