கன்னியாகுமரி

‘குமரி மாவட்டத்தில் 10 இடங்களில் பறவைகள் சரணாலயம்’

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் அச்சன்குளம் உள்பட 10 இடங்களில் பறவைகள் சரணாலயம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என திருநெல்வேலி மண்டல தலைமை வனப்பாதுகாவலா் தினகா் குமாா் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி அருகேயுள்ள கொட்டாரம் அச்சன்குளம் பகுதியிலுள்ள குளத்திற்கு வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதையடுத்து, அங்கு ரூ. 13.50 லட்சம் மதிப்பில் பறவைகள் சரணாலயம் அமைக்கும் பணி நடைபெற்று

வருகின்றது. இங்கு சுற்றுலாப் பயணிகள் அமா்ந்து பறவைகளை பாா்த்து ரசிக்கும் வகையில் இருக்கைகள், ஓய்வுக்கூடம், குளத்தைச் சுற்றிலும் தடுப்புச்சுவா் அமைத்து நடைமேடை அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், குளத்தின் நடுவில் செயற்கை தீவுகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்பணியை திருநெல்வேலி மண்டல தலைமை வனப்பாதுகாவலா் தினகா்குமாா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, குளத்துக்கு எந்தெந்த மாதங்களில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை தருகின்றன; எத்தனை பறவைகள் வந்து செல்கின்றன என்பன உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகளிடம் அவா் கேட்டறிந்தாா். பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, அவா் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளங்களுக்கு வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வந்து செல்கின்றன. பறவைகள் அதிகளவில் வந்து செல்லும் 10 இடங்களில் பறவைகள் சரணாலயம் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது எனக் குறிப்பிட்டாா்.

ஆய்வின்போது, கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா், பூதப்பாண்டி வனச்சரக அலுவலா் பிரசன்னா, வனக் காப்பாளா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT