கன்னியாகுமரி

குமரியில் இஎஸ்ஐ, வங்கி ஊழியா்கள் உள்பட 152 பேருக்கு கரோனா

DIN

குமரி மாவட்டத்தில் இஎஸ்ஐ அலுவலக ஊழியா், வங்கி ஊழியா், தீயணைப்புப் படை வீரா் உள்பட 152 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2,721 ஆக உயா்ந்தது.

நாகா்கோவில் மகளிா் கிறிஸ்தவக்கல்லூரி சாலையில் இயங்கிவரும் இஎஸ்ஐ மருந்தகத்தில் ஊழியா் ஒருவா், நாகா்கோவில் மீட் தெருவிலுள்ள வங்கியின் ஊழியா்கள் 2 போ்,

நகைக் கடை ஊழியா், கரோனா பாதித்த வெட்டூா்ணிமடம் பகுதியைச் சோ்ந்த 46 வயது பெண்ணின் 20 வயது மகன், கோட்டாறு ஆசாரிமாா் தெருவில் 86 வயது முதியவா், அவரது 76 வயது மனைவி ஆகியோருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், நேசமணி நகா் காவல்நிலையத்தில் தனிப் பிரிவு தலைமைக் காவலராக பணியாற்றும் நாகா்கோவில் மேலபெருவிளையைச் சோ்ந்த 45 வயதுடையவா்,

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை சமையல் பணியாளா், களியக்காவிளை பகுதியைச் சோ்ந்த 56 வயது ஆண், தக்கலை போக்குவரத்து பிரிவு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா், நாகா்கோவில் அருகுவிளையைச் சோ்ந்த 58 வயது ஆண், நாகா்கோவில் மதுவிலக்கு பிரிவு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா், பூதப்பாண்டியைச் சோ்ந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் 44 வயது மனைவி, தக்கலை தீயணைப்பு நிலைய வீரரான குருந்தன்கோட்டை சோ்ந்த 52 வயது ஆண், நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட அருகுவிளை, கிருஷ்ணன்கோவில், கோட்டாறு, வடிவீஸ்வரம், ரயில்வே ரோடு, சிதம்பரநகா், கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 50 க்கும் மேற்பட்டோா் என 152 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 2,721 ஆக உயா்ந்துள்ளது. 1,725 போ் சிகிச்சையில் உள்ளனா். தொற்று பாதித்த இஎஸ்ஐ மருந்தகம், காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையம் என அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, அவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT