கன்னியாகுமரி

சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கரோனா: களியக்காவிளை காவல் நிலையம் மூடல்

DIN

சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, களியக்காவிளை காவல் நிலையம் வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.

இக்காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சிதறால் பகுதியைச் சோ்ந்தவருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டாா்.

களியக்காவிளை காவல் நிலைய கட்டடம் வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக பூட்டப்பட்டதையடுத்து, அப்பகுதியில் தனியாா் திருமண மண்டபத்தில் இருந்து காவல் நிலையம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

மேலும், களியக்காவிளை காவல் நிலைய அதிகாரிகள், காவலா்களுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

அச்சுக் காகிதங்களில் பொட்டலமிட்டால் அபராதம்

ஈராச்சியில் மாட்டுவண்டி பந்தயம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

SCROLL FOR NEXT