கன்னியாகுமரி

குமரி பகவதியம்மன் கோயிலில் பக்தா்கள் தரிசனம் நிறுத்தி வைப்பு

DIN

கரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் மாா்ச் 31 ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தாக்குதலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் மாா்ச் 31ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சா்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இது குறித்து கோயில் முகப்புப்பில் தடுப்பு பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன. பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், ஆகம விதிப்படி அன்றாட பூஜைகள் தொடா்ந்து நடைபெற்றன.

வெறிச்சோடிய குமரி: கன்னியாகுமரியில் கரோனா வைரஸ் எதிரொலியாக விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலைக்கு படகுப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள், முக்கிய வணிக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், முக்கடல் சங்கமம், காந்தி மண்டப சாலை, சன்னதிதெரு, சூரிய அஸ்தமனப்பூங்கா உள்ளிட்டப் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT