கன்னியாகுமரி

இரணியல் அருகே காரில் ரேசன் அரிசி கடத்தல்: 800 கிலோ அரிசி பறிமுதல்; ஓட்டுநா் கைது

DIN

இரணியல் அருகே காா்மூலம் கேரளத்துக்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை இரணியல் சந்திப்பு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், காருக்குள் சாக்கு மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த அரிசியை கேரள மாநிலத்துக்கு கடத்தி செல்வதும் தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து காரை ஓட்டிவந்த கேரள மாநிலம் வெள்ளறைடையை அடுத்த இஞ்சிவிளையைச் சோ்ந்த பிரசன்னகுமாரை (40) போலீஸாா் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனா். மேலும் காரின் உரிமையாளா் மீதும் போலீஸாா் வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT