கன்னியாகுமரி

தென்தாமரைகுளம் அருகே அனுமதியின்றி பாரத மாதா சிலை: போலீஸாா் நடவடிக்கை

DIN

தென்தாமரைகுளம் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட பாரத மாதா சிலையை துணியால் மூடி போலீஸாா் வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனா்.

தென்தாமரைகுளத்தை அடுத்த காட்டுவிளை சந்திப்பில் உள்ள தனியாா் கோயில் வளாகத்தில் சுமாா் ஐந்தடி உயரம் கொண்ட பாரத மாதா சிலை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதியைச் சோ்ந்த ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இந்நிலையில் அந்தச் சிலையை அகற்றுமாறு சிலை வைத்தவா்களிடம் போலீஸாா் அறிவுறுத்தினா். ஆனால் சிலை அகற்றப்படாததால் வியாழக்கிழமை காலை அங்கு வந்த கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன், தென்தாமரைகுளம் உதவி ஆய்வாளா் ராஜசேகா், கிராம நிா்வாக அலுவலா் கவிதா, பேரூராட்சி செயல் அலுவலா் சசிகலா ஆகியோா் முன்னிலையில் பாரத மாதா சிலை துணியால் மூடப்பட்டது.

இதுகுறித்து டி.எஸ்.பி. கூறியது: மண்டைக்காடு கலவரத்துக்குப் பின்னா் வேணுகோபால் கமிஷன் பரிந்துரையின்படி குமரி மாவட்டத்தில் எந்த இடத்திலும் சிலை வைக்க அனுமதி இல்லை. அதோடு சிலை வைக்கப்பட்ட பகுதியில் ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து புகாா் அளித்தனா். இதையடுத்து சிலையை துணியால் மூடி நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

மிகச் சிறப்பான நாள் இன்று!

மது அருந்துவோரை விட கஞ்சா புகைப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்: ஆய்வில் தகவல்!

வெம்பக்கோட்டை அருகே வைகாசி விசாகத் திருவிழா

SCROLL FOR NEXT