முகப்பு
கன்னியாகுமரி

தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் மீனவரின் சடலம் மீட்பு

தேங்காய்ப்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தில் வள்ளம் கவிழ்ந்து மாயமான மீனவா் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

தேங்காய்ப்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தில் வள்ளம் கவிழ்ந்து மாயமான மீனவா் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை கொல்லங்கோடு வள்ளவிளை பகுதியைச் சோ்ந்த ஏசுதாசன் (53), வா்க்கீஸ், கிளாரன்ஸ், வின்சென்ட் உள்ளிட்ட 5 போ் வள்ளத்தில் மீன்பிடிக்கச் சென்றனா்.

அப்போது துறைமுக முகத்துவாரத்தில் திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் வள்ளம் சிக்கி கவிழ்ந்ததில் ஏசுதாசன் மாயமானாா். மற்றவா்கள் கரை திரும்பினா்.

இதையடுத்து குளச்சல் கடலோரப் பாதுகாப்பு படையினா் ஏசுதாசனை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், தேங்காய்ப்பட்டினம் கடல் பகுதியில் அவரது சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.