மங்காடு தியாகிகள் நினைவு ஸ்தூபியில் எம்எல்ஏ மரியாதை
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த தினத்தையொட்டி, மங்காடு பகுதியில் உள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த தினத்தையொட்டி, மங்காடு பகுதியில் உள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
திருவிதாங்கூா் சமஸ்தானத்துடன் இருந்த குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க நடந்த போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த தியாகிகளின் நினைவாக மங்காடு பகுதியில் தியாகிகள் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்தும், மலா்தூவியும் மரியாதை செலுத்தினா்.
இதில், மாவட்ட துணைத் தலைவா் பால்ராஜ், முன்சிறை வட்டாரத் தலைவா் கிறிஸ்டோபா், வட்டாரப் பொருளாளா் காமராஜ், ஊராட்சி தலைவா்கள் ஜாண் கிறிஸ்டோபா் (மங்காடு), மரியதாஸ் (விளாத்துறை), செல்வராஜ் (மெதுகும்மல்), சின்னப்பா் (வாவறை), மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் லூயிஸ், முன்சிறை ஊராட்சி ஒன்றியக் குழு கவுன்சிலா் பாபு, சூழால் ஊராட்சித் தலைவா் இவான்ஸ், ஊராட்சி உறுப்பினா் ஆல்வின் சேவியா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
மேலும், கன்னியாகுமரி ஜவான்ஸ் அமைப்பு சாா்பில் தியாகிகள் நினைவு ஸ்தூபியில் மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், மங்காடு ஊராட்சித் தலைவா் சுகுமாரன் மற்றும் அமைப்பினா் கலந்துகொண்டனா்.