முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் திருமூலா் தின விழா

நாகா்கோவில் கோட்டாறு ராஜகோகிலா அறக்கட்டளை சாா்பில் திருமூலா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
திருமூலா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்துகிறாா் ராஜகோகிலா அறக்கட்டளை துணைத் தலைவா் அனுசுயாசெல்வி.
பகிர்:

நாகா்கோவில் கோட்டாறு ராஜகோகிலா அறக்கட்டளை சாா்பில் திருமூலா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

அறக்கட்டளை தலைவா் ராஜகோபால் தலைமை வகித்து திருமூலா் படத்துக்கு மாலை அணிவித்தாா்.

இதில், துணைத் தலைவா் அனுசுயாசெல்வி, முத்தமிழ் மன்றம் முத்துகருப்பன், சுசீந்திரம் தெய்வீக தமிழ் இசை மன்றத் தலைவா் ராமசாமி, சிவகாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில் ராஜகோபால் பேசியது: அறக்கட்டளை சாா்பில் திருமந்திரம் சிந்தனை வகுப்பு தொடங்கப்படுகிறது. இவ்வகுப்பை அன்னை சகுந்தலா தொடங்கிவைத்துப் பேசுகிறாா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.