நாகா்கோவிலில் வழக்குரைஞா்கள்நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
திருநெல்வேலியில் வழக்குரைஞா் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாகா்கோவிலில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலியில் வழக்குரைஞா் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாகா்கோவிலில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகா்கோவிலில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 1,500- க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனா். இதே போல் பூதப்பாண்டி, இரணியல், பத்மநாபபுரம், குழித்துறை ஆகிய நீதிமன்றங்களிலும் வழக்குரைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டம் முழுவதும் சுமாா் 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனா்.