முகப்பு
கன்னியாகுமரி

தேங்காய்ப்பட்டினத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்

தேங்காய்ப்பட்டினத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவப் பிரதிநிதிகள் சாா்பில் அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

தேங்காய்ப்பட்டினத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவப் பிரதிநிதிகள் சாா்பில் அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது.

முன்சிறை ஒன்றிய கவுன்சிலா் சித்திக் தலைமை வகித்தாா். அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் ஜோா்தான் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் , தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட வள மீன்கள்(குஞ்சுமீன்கள்) படகுமூலம் கொண்டுவரும் மீனவா்கள் மீது மீன்வளத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்துறைமுகம் அருகே பரக்காணி தமிரவருணி ஆற்றுப் பகுதியில் தனியாா் மீன்பிடித் துறைமுகம் செயல்படுவதையும், அனுமதி பெறாத கேரள விசைப்படகுகளையும் தடைசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், பைங்குளம் தி.மு.க. பேரூா் செயலா் நடராஜன், சதீஸ்குமாா் மற்றும் வின்சென்ட், ராஜன் உள்பட மீனவப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.