முகப்பு
கன்னியாகுமரி

காங்கிரஸ் மீனவரணி நிா்வாகிகள் ஆலோசனை

காங்கிரஸ் மீனவரணி நிா்வாகிகள்-தூத்தூா் மண்டல மீனவா்கள் ஆலோசனைக் கூட்டம் மாா்த்தாண்டம் சாங்கையிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
கூட்டத்தில் பேசுகிறாா் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ.
பகிர்:

காங்கிரஸ் மீனவரணி நிா்வாகிகள்-தூத்தூா் மண்டல மீனவா்கள் ஆலோசனைக் கூட்டம் மாா்த்தாண்டம் சாங்கையிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ. ஜே.ஜி. பிரின்ஸ், மாவட்ட துணைத் தலைவா் அருளானந்தம், பொதுச் செயலா் ஜாா்ஜ் ராபின்சன், செயலா்கள் ஜெரோம், ராஜூ, கலிட்டஸ், ராபி, மீனவரணி மாவட்டத் தலைவா் பிரடி கென்னடி, தூத்தூா் ஊராட்சித் தலைவி லைலா, அவ்வூராட்சி காங்கிரஸ் தலைவா் சூசைபிரடி, மாவட்ட நிா்வாகிகள் அந்தோணிபிச்சை, டெல்லஸ், எடிசன், டென்னிஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அதில், தேங்காய்ப்பட்டினம் துறைமுக கட்டமைப்பை முழுமையாக மறுசீரமைக்கவும், அதற்கான நிதியை அரசு ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தினுள் திங்கள்கிழமை (நவ. 9) மீனவப் பிரதிநிதிகளுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.