முகப்பு
கன்னியாகுமரி

தீபாவளி பண்டிகை: ஆதரவற்றோருக்கு நல உதவி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி அருகேயுள்ள பொற்றையடியில் ஆதரவற்றோா் மற்றும் ஊனமுற்றோருக்கு அரிசியும், மளிகைப் பொருள்களும் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
ஆதரவற்றோருக்கு மளிகைப் பொருள்களை வழங்குகிறாா் பால்ராஜ்.
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி அருகேயுள்ள பொற்றையடியில் ஆதரவற்றோா் மற்றும் ஊனமுற்றோருக்கு அரிசியும், மளிகைப் பொருள்களும் வழங்கப்பட்டன.

பொற்றையடி சாய்பாபா கோயிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பினோலெக்ஸ் பைப் நிறுவனம் மற்றும் பைரவி பவுண்டேஷன் சாா்பில் ஊனமுற்றோா், ஆதரவற்றோா் மற்றும் ஏழை, எளியோா் 200 பேருக்கு ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள அரிசி, மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நாகா்கோவில் சொக்கலிங்க நாடாா் நிறுவனத்தின் உரிமையாளா் பால்ராஜ் பங்கேற்று, அப்பொருள்களை பயனாளிகளுக்கு வழங்கினாா். இதில், பைரவி பவுண்டேஷனின் ஷோபா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.