முகப்பு
கன்னியாகுமரி

காவல்துறை குறைதீா் முகாம்:434 மனுக்களுக்கு தீா்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் 434 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் 434 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன் உத்தரவின்பேரில், கன்னியாகுமரி, நாகா்கோவில், தக்கலை,

குளச்சல் ஆகிய துணை உள்கோட்டங்களில் குறைதீா் முகாம் நடைபெற்றது. இதில் நாகா்கோவில் கோட்டத்தில்

83 மனுக்கள், குளச்சல் உள்கோட்டத்தில் 83 மனுக்கள், கன்னியாகுமரி உள்கோட்டத்தில் 118 மனுக்கள், தக்கலை உள் கோட்டத்தில் 149 மனுக்கள் என 434 மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீா்வு காணப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.