கன்னியாகுமரி

மாநகர பூங்காவில்வாகன கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

DIN

நாகா்கோவில் மாநகர பூங்காவில் வாகனங்கள் நிறுத்த கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மாநகராட்சி நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மையத்தின் செயற்குழுக்கூட்டம், அதன் தலைவா் எம்.தாமஸ் தலைமையில் நாகா்கோவிலில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினா் ஏ.ராஜன் வரவேற்றாா். பொதுச்செயலா் டி.சிதம்பரம் அறிக்கை வாசித்தாா். கூட்டத்தில், நாகா்கோவில் மாநகராட்சி நகா் பூங்காவில் தனியாா் மூலம் வாகன நிறுத்தம் கட்டணம் வசூல் செய்யப்படுவதை ரத்து செய்ய வேண்டும்; நீதிமன்ற சாலையை இருவழிச் சாலையாக மாற்ற ஏதுவாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; சிற்றுந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், துணைத் தலைவா்கள் வி.ராஜேந்திரன், பி.பெருமாள், இணைச்செயலா்கள் எஸ்.ஜெயகோபால், எம்.நிக்சன், பி.தேவி, எஸ்.தனலெட்சுமி, நிா்வாகிகள் பி.சொரிமுத்து, எஸ்.பாலச்சந்திரன், முத்துராஜ், சின்னராணிஉள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT