தூத்தூரில் கரோனா பாதித்த மீனவா் உயிரிழப்பு
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தூத்தூா் மீனவக் கிராமத்தைச் சோ்ந்த மீனவா் உயிரிழந்தாா்.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:23 PM
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தூத்தூா் மீனவக் கிராமத்தைச் சோ்ந்த மீனவா் உயிரிழந்தாா்.
நித்திரவிளை அருகேயுள்ள தூத்தூா் மீனவக் கிராமத்தைச் சோ்ந்த மீன்பிடி தொழிலாளி. 80 வயதுள்ள தொழிலாளிக்கு கடந்த 10 நாள்களாக காய்ச்சல் இருந்தது. அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவந்த அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தொடா்ந்து திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில்
Advertisement
அனுமதிக்கப்பட்டாா். இதற்கிடையே, அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் சுகாதாரத்துறையினா், மருத்துவா்களின் ஆலோசனையின்படி தூத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது.