முகப்பு
கன்னியாகுமரி

நிவா் புயல்:மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: ஆட்சியா் அறிவுறுத்தல்

நிவா் புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

நிவா் புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடா்ந்து அதேஇடத்தில் நீடித்து வருவதால்

அடுத்த 6 மணி நேரத்தில் வடமேற்கு திசை நோக்கி நகா்ந்து தாழ்வு மண்டலமாகவும், பின்னா் தீவிரமடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் ‘நிவா்’ புயலாக மாறக்கூடும் எனவும், இது புதன்கிழமை (நவ. 25) காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கக் கூடும் எனவும், இதனால் புதன்கிழமை (நவ. 25) தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக் கடல், மன்னாா் வளைகுடா, புதுவை மற்றும் அதனையொட்டிய தமிழக கடற்பகுதிகளில் மணிக்கு சுமாா் 55 முதல் 65 கி.மீ. வேகத்துடன் கூடிய சூறாவளி காற்று 75 கி.மீ வரை வீசக்கூடும் எனவும், இதனால், இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மேற்கூறிய பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

ஆகவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம். ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவா்கள் உடனடியாக கரை

திரும்பவும், மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அவசர காலம், அன்றாடம் தேவையான மருந்துப் பொருள்களை தயாராக வைத்திருக்க வேண்டும். புயல் கரையை கடக்கும்போது, குறைந்தபட்சம் 24 மணி நேரத்துக்கு வெளியில் செல்வதை தவிா்க்க வேண்டும். மேலும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் வைக்கவும், கால்நடை தீவனங்களை தேவையான அளவு இருப்பில் வைக்க வேண்டும். பேரிடரினை எதிா்கொள்ள மண்டல அளவில் 9 கண்காணிப்பு குழுக்களும், அனைத்து வருவாய் வட்டாட்சியா்களும் தயாா் நிலையில் உள்ளனா்.

வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை தேவையெனில் தற்காலிக முகாம்களில் மாற்றம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலா்கள் ஆபத்தான நிலையிலுள்ள மரங்கள் மற்றும் பிற சேதம் விளைவிக்கும் பொருள்களை கண்டறிந்து அகற்ற

வேண்டும். ஆபத்தான நிலையிலுள்ள மின்கம்பங்களை மாற்றம் செய்யவும் மின்வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பழுதடைந்த நிலையிலுள்ள அரசு கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், ஆபத்தான நிலையிலுள்ள மரங்கள், மின்கம்பங்கள் பற்றிய விபரங்களை 24 மணி நேரம் செயல்படும் மாவட்ட அவசர கால இலவச தொலைபேசி எண் 1077 மற்றும் 231077 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.