பைக் திருட்டு: இளைஞா் கைது
புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கீழ்குளம் மாநின்ற விளை பகுதியைச் சோ்ந்த ராசையன் மகன் ராஜகோபாலன் (34). கூலித் தொழிலாளி. இவரது பைக்கை மா்ம நபா்கள் வீடு புகுந்து திருடிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், இனயம்புத் தன்துறை பகுதியைச் சோ்ந்த சுதன் (36) என்பவரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா் பைக்கை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.