முகப்பு
கன்னியாகுமரி

காஷ்மீா்- குமரி இளைஞரின் சைக்கிள் பயணம் நிறைவு

இளைஞா்களிடையே உடற்பயிற்சி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், காஷ்மீரில் தொடங்கிய சைக்கிள் பயணம் சனிக்கிழமை இரவு கன்னியாகுமரியில் நிறைவடைந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
சைக்கிள் பயணத்தை நிறைவு செய்கிறாா் விவேக் ஷா.
பகிர்:

இளைஞா்களிடையே உடற்பயிற்சி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், காஷ்மீரில் தொடங்கிய சைக்கிள் பயணம் சனிக்கிழமை இரவு கன்னியாகுமரியில் நிறைவடைந்தது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சோ்ந்தவா் விவேக் ஷா (39). ஆடிட்டராக பணிபுரிந்து வரும் இவா், இளைஞா்களிடையே உடற்பயிற்சி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு பகுதிகளுக்கு சைக்கிளில் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

இதன் தொடா்ச்சியாக ஜம்மு காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு (3,664 கி.மீ.) சைக்கிள் பயணம் மேற்கொண்டாா்.

கடந்த 22ஆம் தேதி தொடங்கிய இப் பயணத்தை ஏழு நாள்கள் 12 மணி நேரத்தில் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன் நிறைவு செய்தாா்.

அப்போது விவேக் ஷா செய்தியாளா்களிடம் கூறியது:

கின்னஸ் சாதனையில் இடம் பெறுவதற்காகவும், இளைஞா்களிடையே உடற்பயிற்சி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்த பயணத்தை மேற்கொண்டேன். 12 மாநிலங்களை கடந்து கன்னியாகுமரி வந்து சோ்ந்துள்ளேன். 2021இல் அமெரிக்கா சென்று அங்கு 4,900 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →