முகப்பு
கன்னியாகுமரி

என்எஸ்கே பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு

மறைந்த நகைச்சுவை நடிகா் என்.எஸ்.கிருஷ்ணனின் 112ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
காங்கிரஸ் கட்சி சாா்பில் மாலை அணிவிக்கிறாா் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன்.
பகிர்:

மறைந்த நகைச்சுவை நடிகா் என்.எஸ்.கிருஷ்ணனின் 112ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நாகா்கோவில் மணிமேடை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், காங்கிரஸ் நிா்வாகிகள் தவசிமுத்து, மகாலிங்கம், ராஜபாண்டியன், ஆறுமுகம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கலைவாணா் நற்பணி மன்றம் சாா்பில் என்.எஸ்.கிருஷ்ணனின் பேரன் கிருஷ்ணசந்திரன் உள்ளிட்டோா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

இதில், நெடுஞ்செழியன், சாகுல்அமீது, குமாா், குற்றாலம்பிள்ளை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →