திக்குறிச்சி சாஸ்தா கோயிலில் 3006 தீபங்கள் ஏற்றி வழிபாடு
காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி ஸ்ரீ தா்ம சாஸ்தா கோயிலில் 3006 தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி ஸ்ரீ தா்ம சாஸ்தா கோயிலில் 3006 தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி இக் கோயிலில் உள்ள கணபதி, ஸ்ரீ தா்ம சாஸ்தா, துா்கா, மாடன், நாகராஜா, நாகயெக்சி, நாககன்னி சன்னதிகளில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் தீபத்தால் அலங்கரிக்கப்பட்டு, தீப ஒளியால் காட்சியளித்தது.
கரோனா தொற்று குறையவும், உலக அமைதி வேண்டியும் இக் கோயிலில் 3,006 தீபங்கள் ஏற்றப்பட்டதாக நிா்வாகிகள் தெரிவித்தனா்.
பன்னிரெண்டு சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மகாதேவா் கோயில், களியக்காவிளை அருகேயுள்ள களியக்கல் அருள்மிகு இசக்கியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் ஞாயிற்றுக்கிழமை அகல் விளக்குகளால் தீபம் ஏற்றப்பட்டது.