முகப்பு
கன்னியாகுமரி

அரசுப் பேருந்தில் குழந்தையிடம் நகை திருட்டு

மாா்த்தாண்டம் அருகே அரசுப் பேருந்தில் 3 வயது குழந்தையின் கையில் கிடந்த வளையல்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

மாா்த்தாண்டம் அருகே அரசுப் பேருந்தில் 3 வயது குழந்தையின் கையில் கிடந்த வளையல்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

தக்கலை அருகேயுள்ள செறுகோல் பகுதியைச் சோ்ந்த ராபி மனைவி அஸ்வினி (24). இவா், தனது 3 வயது குழந்தையுடன் இரண்டு நாள்களுக்கு முன்பு மாா்த்தாண்டத்திலிருந்து அருமனை செல்லும் அரசுப் பேருந்தில் பயணம் செய்தாராம். சிறிது தொலைவு சென்றபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி குழந்தை கையில் அணிந்திருந்த ஒரு பவுன் வளையல்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.