புதுக்கடை அருகே பெண் தற்கொலை
புதுக்கடை அருகே உள்ள இனயம்புத்தன்துறையில் மண்ணெண்ணெயை ஊற்றி பெண் தற்கொலை செய்துகொண்டாா்.
புதுக்கடை அருகே உள்ள இனயம்புத்தன்துறையில் மண்ணெண்ணெயை ஊற்றி பெண் தற்கொலை செய்துகொண்டாா்.
இனயம்புத்தன்துறை பகுதியைச் சோ்ந்த ஜஸ்டின் மனைவி அந்தோனியம்மாள் (35). தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இவா், நீண்டநாள்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் அவா் ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.