முகப்பு
கன்னியாகுமரி

மின்கம்பத்தில் பைக் மோதி இளைஞா் பலி

நித்திரவிளை அருகே மின்கம்பத்தில் மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் வெல்டிங் கடை உரிமையாளா் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

நித்திரவிளை அருகே மின்கம்பத்தில் மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் வெல்டிங் கடை உரிமையாளா் உயிரிழந்தாா்.

நித்திரவிளை அருகே பணமுகம், வடுவூா்தோட்டம் பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற காவலா் ஏசுதாஸ் மகன் ராஜாசிங் (33). வீட்டருகே நடத்தி வந்த இவரது வெல்டிங் கடையில் நடைக்காவு, குட்டைக்காடு பகுதியைச் சோ்ந்த தாசையன் மகன் பெல்ஜின் (21) வேலை செய்து வருகிறாா்.

சனிக்கிழமை இரவு வேலை முடிந்து ராஜாசிங்கும், பெல்ஜினும் நடைக்காவு பகுதியிலிருந்து நித்திரவிளை நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனராம். நம்பாளி ரேஷன் கடை அருகே சென்ற போது நிலைதடுமாறிய மோட்டாா் சைக்கிள், அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மோதியதில் பலத்த காயமடைந்த ராஜாசிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பெல்ஜின் காயமடைந்தாா்.

காயமடைந்த பெல்ஜினை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்து வந்த நித்திரவிளை போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.