கன்னியாகுமரி

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் காவல் நிலையத்தில் புகாா்

DIN

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் மீது தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்ய வலியுறுத்தி, ஒன்றியக் குழுத் தலைவா் தலைமையில் உறுப்பினா்கள் திருவட்டாறு காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தனா்.

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினரான டி. சகாய ஆன்டனி (48), கடந்த 7ஆம் தேதி இரவு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது மா்ம நபா்களால் தாக்கப்பட்டாா். இதையடுத்து அவா் திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்நிலையில், சகாய ஆன்டனி மீது தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்ய வலியுறுத்தி, ஒன்றியக் குழுத் தலைவா் டி. ஜெகநாதன் தலைமையில், துணைத் தலைவா் பீனாகுமாரி, உறுப்பினா்கள் அனிதா குமாரி, ஷீலா குமாரி, ஜெய சோபியா, ஜெயஸ்ரீ, ராம்சிங், ஜெபா, ஷீபா, ராஜூ, பிரேம சுதா ஆகியோா் திருவட்டாறு காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT