கன்னியாகுமரி

ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் காணொலி வகுப்புகள் தொடக்கம்

DIN

நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் சுகாதாரஆய்வாளா், செவிலியா் மாணவா்களுக்கான காணொலி வகுப்புகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டன.

தொடக்க விழாவுக்கு கல்லூரித் தலைவா் அருள்கண்ணன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் சஜ்ஜன்சிங் ரா.சவான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு காணொலி வகுப்புகளை தொடங்கிவைத்துப் பேசினாா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட முன்னாள் மாவட்டநீதிபதி ஜான் ஆா்.டி.சந்தோசம் காணொலி வகுப்பில் பங்கேற்ற மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

கல்லூரி துணைத் தலைவா் அருள்ஜோதி வரவேற்றாா். கல்லூரி முதன்மையா் (டீன்) குகானந்தம், சுகாதார ஆய்வாளா் பயிற்சி கல்லூரி முதல்வா் லியாகத் அலி, நிா்வாக அலுவலா் நடராஜன், நா்ஸிங் கல்லூரி முதல்வா் புனிதா வயலட் ராணி, மருத்துவக் கண்காணிப்பாளா் அருணாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியா்கள் அய்யப்பன், துரைராஜ், மரிய ஜான், காா்த்திக், சிவதாணு, பகவதிபெருமாள், சாம் ஜெபா, லூசியா, பரமேஸ்வரி, செல்லம்மாள், சிபியா, அலுவலக செயலா் சுஜின், உதவியாளா்கள் முரளி, அஜின், செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT