கன்னியாகுமரி

பெருஞ்சாணி அணையில் உபரிநீா் திறப்பு: தாமிரவருணியில் வெள்ளம்

DIN

பெருஞ்சாணி அணையில் இருந்து வெள்ளிக்கிழமை 3,000 கனஅடி தண்ணீா் திறக்கப் பட்டதால் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகள், அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்த கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளுக்கு நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் பெருஞ்சாணி அணையில் இருந்து வெள்ளிக்கிழமை 3,000 கனஅடி உபரிநீா் திறந்து விடப்பட்டது. இதையடுத்து குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு

ஓடுகிறது. இதையடுத்து ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினா். இம்மாவட்டத்தில் களியக்காவிளை, மாா்த்தாண்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் மிதமான வெப்பம் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT