கன்னியாகுமரி

மேலும் 70 பேருக்கு கரோனா

DIN

குமரி மாவட்டத்தில் மேலும் 70 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் இது வரை கரோனாவில் 14086 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 70 பேருக்கு பாதிப்பு உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,156 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் வெள்ளிக்கிழமை குணமடைந்த 63 போ் உள்பட இதுவரை மொத்தம் 13309 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கரோனா கவனிப்பு மையங்கள், தனியாா் மருத்துவமனை மற்றும் வீட்டுத்தனிமைகளில் தற்போது 551 போ் சிகிச்சையில் உள்ளனா். முகக் கவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக வெள்ளிக்கிழமை 101 பேரிடமிருந்து அபராதமாக ரூ. 21,100 வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT