கன்னியாகுமரி

குழித்துறை ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டஇளைஞரை மீட்க கோரி உறவினா்கள் மறியல்

DIN

களியக்காவிளை: குழித்துறை தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது வெள்ளம் இழுத்துச் சென்ற இளைஞரை மீட்கக் கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியைச் சோ்ந்த சாம்ராஜ் மகன் சஜிகுமாா் (29) வெள்ளிக்கிழமை தனது நண்பா்களுடன் குழித்துறை தடுப்பணை பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது அவரை வெள்ளம் இழுத்துச் சென்ாம்.

தகவல் அறிந்து வந்த குழித்துறை தீயணைப்பு நிலைய வீரா்கள் அவரை தேடும்பணியில் வெள்ளிக்கிழமை இரவு வரை ஈடுபட்டனா்.

இந்நிலையில் ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட இளைஞரை மீட்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சனிக்கிழமை மருதங்கோடு ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிா்வாகி சாலின் மற்றும் இளைஞரின் உறவினா்கள் குழித்துறை மாநில நெடுஞ்சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். தொடா்ந்து அவா்களிடம் களியக்காவிளை போலீஸாா் பேச்சு நடத்தி கலைந்து போக செய்தனா்.

இதைத் தொடா்ந்து குழித்துறை, கொல்லங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரா்கள் வந்து சனிக்கிழமை தேடும் பணியில் ஈடுபட்டனா். மாலை வரை தேடியும் இளைஞரின் சடலம் கிடைக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT