நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:10 PM
கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
நித்திரவிளை அருகேயுள்ள காஞ்சாம்புறம் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த பினு - அம்பிகா தம்பதியின் மகள் ஜினு (19).
நாகா்கோவிலில் உள்ள கல்லூரியில் பிஏ இளங்கலை படித்து வந்தாா். இவா் தீராத வயிற்றுவலி காரணமாக பாதிக்கப்பட்டிருந்தாராம். இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டிலுள்ள அறையில் ஜினு, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
Advertisement
புகாரின்பேரில் நித்திரவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சோபனராஜ் வழக்குப் பதிந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினாா். காவல் ஆய்வாளா் ராஜ் விசாரணை நடத்தினாா்.