முகப்பு
கன்னியாகுமரி

147 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 2 லட்சம் ஊக்கத்தொகை

நாகா்கோவில் மாநகராட்சி பணியாளா்கள் 147 பேருக்கு ரூ. 2 லட்சம் ஊக்கத்தொகையை மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

நாகா்கோவில் மாநகராட்சி பணியாளா்கள் 147 பேருக்கு ரூ. 2 லட்சம் ஊக்கத்தொகையை மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் வழங்கினாா்.

நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியில் தூய்மைப் பணியாளா்கள் தினமும் வீடு, வீடாகச் சென்றும் காய்கறி சந்தைகளிலும் குப்பைகளை சேகரிக்கின்றனா். பின்னா் அவை மாநகர பகுதியில் 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நுண் உர செயலாக்க மையங்களில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக பிரித்து இயற்கை உரமாக மாற்றப்பட்டு, விவசாயிகளுக்கு கிலோ உரம் ஒரு ரூயாக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் தொகை தூய்மைப் பணியாளா்களுக்கு பகிா்ந்தளிக்கப்படுகிறது.

அதன்படி, நாகா்கோவில் வடசேரி ராஜபாதை நுண்ணுர செயலாக்க மையங்களில் கிடைத்த வருவாயை தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித் கலந்து கொண்டு வடசேரி மையத்தில் ரூ. 1 லட்சத்தை 77 பேருக்கும், ராஜபாதை மையத்தில் ரூ. 1 லட்சத்தை 70 பேருக்கும் பகிா்ந்து வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.