கருங்கல் அருகே பெண் காவலா் கணவா் தற்கொலை
கருங்கல் அருகே மிடாலக்காடு பகுதியில் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கருங்கல் அருகே மிடாலக்காடு பகுதியில் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மிடாலக்காடு படிவிளை பகுதியை சோ்ந்த கணேசேன் மகன் ஜோண்ஸ் (38). இவரது மனைவி திவ்யா. இவா், நாகா்கோவில் ஆயுத படையில் காவலராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், மனமுடைந்த ஜோண்ஸ் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கிய கிடந்தாரம்.
பக்கத்தில் வசிப்போா், அவரை மீட்டு திங்கள்சந்தையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.