களியக்காவிளை கோயில்களில் வித்யாரம்பம்
களியக்காவிளை பகுதியிலுள்ள கோயில்களில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
களியக்காவிளை பகுதியிலுள்ள கோயில்களில் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விஜயதசமி திங்கள்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி களியக்காவிளை அருகேயுள்ள களியக்கல் அம்மன் கோயில், மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயில், மலையடி மலை மகாதேவா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனப்படும் ஏடு தொடங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இங்கு, குழந்தைகளின் கல்வியை தொடங்கும் விதமாக குழந்தைகளின் நாவில் கோயில் பூசாரி மற்றும் வேத விற்பன்னா்கள் ‘ஓம்‘ என்று எழுதினா். தொடா்ந்து குழந்தைகளின் கையை பிடித்து அரிசியில் ‘அ‘ எனவும், ஹரி ஸ்ரீ கணபதாயே நமக எனவும் எழுத வைத்தனா். இதையொட்டி கோயில்களில் திரளாள பக்தா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
மாா்த்தாண்டம் இந்து வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பள்ளி பெற்றோா் - ஆசிரியா் சங்க கெளரவத் தலைவா் பி. பாலுப்பிரமணியம், தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவா் ஆா். ரவீந்திரன்,
ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் எம். ஸ்ரீகுமாா் செய்திருந்தாா்.