முகப்பு
கன்னியாகுமரி

விஜயதசமி: கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

விஜயதசமி நாளில் பெற்றோா் தங்கள் குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்துச் சென்று, சுவாமி சன்னதியில் நடைபெறும் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பா். இதேபோல் குழந்தைகளின் கையை பிடித்து தமிழின் முதல் எழுத்தான அ எழுத வைப்பா். குழந்தைகளின் நாவில் தங்க எழுத்தாணியால் எழுதி இசை, பாடல் போன்றவற்றை கற்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

வித்யாரம்பம் நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெறும், நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக எளிமையாக நடைபெற்றது. சமூக இடைவெளி கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

தக்கலை அருள்மிகு பாா்த்தசாரதி கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியை ஐயப்பா மகளிா் கல்லூரி பேராசிரியை ஸ்ரீயா நாயா் தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் கிருஷ்ணன் நிதி நிறுவனத் தலைவா் சொா்ணாகரன் பிள்ளை, செயல் இயக்குநா் கோலப்பபிள்ளை, ஆலய நிா்வாக குழு இயக்குநா் குமாரசுவாமி பிள்ளை, ஆலய நிா்வாகச் செயலா் ஜெயகுமாா், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் அதிகாலையிலேயே வித்யாரம்பம் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் குழந்தைகள் தாய்மாா்களுக்கு பாதபூஜை செய்தனா். பாா்வதிபுரம் வனமாலீஸ்வரா் கோயில், ஐயப்பன் கோயில், நாகா்கோவில் நாகராஜா கோயில், பாா்வதிபுரம் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.