மாா்த்தாண்டம் அட்டைக்குளத்தில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கக் கோரிக்கை
மாா்த்தாண்டம் அட்டைக்குளம் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நகர வா்த்தகா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துனா்.
மாா்த்தாண்டம் அட்டைக்குளம் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நகர வா்த்தகா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துனா்.
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மாா்த்தாண்டம், அட்டைக்குளத்தில் குழித்துறை நகராட்சி மற்றும் நல்லூா், உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் இருந்து இரவு நேரங்களில் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அருகில் குடியிருப்பு, வணிக நிறுவனங்களில் துா்நாற்றம் வீசி டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய் தொற்று பரவ காரணமாகிறது.
மேலும் குளம் உள்ளிட்ட நீா்நிலைகளில் கழிவுகள் கொட்டப்படுவதால் வீடுகளில் உள்ள கிணறுகளில் நீா் ஆதாரம் பாதிக்கப்பட்டு தண்ணீா் மாசுபடுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நேரடியாக முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
Advertisement
இதையடுத்து, அட்டைக்குளத்தில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கக் கோரி மாா்த்தாண்டம் நகர வா்த்தக சங்கம் சாா்பாக குழித்துறை நகராட்சி ஆணையா் மூா்த்தி மற்றும் பொதுப் பணித்துறை செயற்பொறியாளா் நீா் வளம் பராமரிப்பு அதிகாரியிடமும், நல்லூா், உண்ணாமலைக்கடை பேரூராட்சிகளின் செயல் அலுவலா்களிடமும் மனுக்கள் கொடுக்கப்பட்டன.
இதில், அட்டைகுளத்தில் குப்பை கொட்டப்படுவதை தடுத்து நிறுத்தாவிட்டால் மாா்த்தாண்டம் நகர வா்த்தக சங்கம் சாா்பில் சம்பந்தப்பட்ட அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்ச்சியில்
வா்த்தக சங்கத் தலைவா் தினகா், துணைத் தலைவா்கள் ராஜகோபால், செல்வராஜ், செயலா் ராஜ் பினோ, துணைச் செயலா்கள் வில்பிரட், நீலகண்டன் பொருளாளா் ஜெயசிங், செயற்குழு உறுப்பினா்கள் லெனின் சேவியா், சுரேஷ், நந்தன்காடு ராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.