கன்னியாகுமரி

பெண் துணை வட்டாட்சியா் உள்பட மேலும் 75 பேருக்கு கரோனா: 4 போ் பலி

குமரி மாவட்டத்தில் பெண் துணை வட்டாட்சியா் குடும்பத்தினா் உள்பட மேலும் 75 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

குமரி மாவட்டத்தில் பெண் துணை வட்டாட்சியா் குடும்பத்தினா் உள்பட மேலும் 75 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகா்கோவில் பெண் துணை வட்டாட்சியா் மற்றும் அவரது குடும்பத்தினா் 4 போ் உள்பட மேலும் 75 பேருக்கு பாதிப்பு உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு 10, 654 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 138 போ் குணமடைந்ததையடுத்து வியாழக்கிழமை அவா்கள் வீடு திரும்பினா். தற்போது 780 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் உள்பட 4 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இதன்மூலம் கரோனாவுக்கு இதுவரை பலியானோா் எண்ணிக்கை 203ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT