மண் பானை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க நிா்வாகிகள். 
கன்னியாகுமரி

மங்காட்டில் விவசாயத் தொழிலாளா் சங்கம் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மங்காடு ஊராட்சி அலுவலகம் முன் விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில், மண்பானை ஏந்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மங்காடு ஊராட்சி அலுவலகம் முன் விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில், மண்பானை ஏந்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மங்காடு ஊராட்சியில் நூறுநாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு பணி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், இப் பணியாளா்களுக்கு தொடா்ச்சியாக பணி வழங்க கோரியும் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, சங்க வட்டாரச் செயலா் எம். சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலா் சிதம்பர கிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினா் தங்கமணி, வட்டாரக் குழு உறுப்பினா்கள் லலிதா, விஜயா, மங்காடு ஊராட்சி முன்னாள் தலைவா் ரீனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT