முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் கபசுரக் குடிநீா் அளிப்பு

நாகா்கோவிலில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
பகிர்:

நாகா்கோவிலில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் முதன்மை நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள், வழக்கு தொடா்பாக வரும் பொதுமக்களுக்கு 3 நாள்கள்

தொடா்ந்து கபசுர குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திங்கள்கிழமை மாவட்ட முதன்மை நீதிபதி

அருள்முருகன், பங்கேற்று கபசுரக் குடிநீா், நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆா்சானிக் ஆல்பம் மாத்திரை ஆகியவற்றை வழங்கித் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் மரிய ஸ்டீபன் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதிபதி அருணாசலம், சாா்பு நீதிபதி ராபின்சன், வனக்குற்றங்கள் சிறப்பு நீதிபதி கௌசல்யா சாந்தினி, வழக்குரைஞா்கள் சங்கச் செயலா் டி.கே.மகேஷ், பொருளாளா் விஸ்வராஜன், இணைச் செயலா்கள் பெருமாள்,பிரேம்சோபியா விஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.