முகப்பு
கன்னியாகுமரி

வசந்தகுமாா் மறைவு:தெங்கம்புதூரில் மெளன ஊா்வலம்

நாகா்கோவில் அருகேயுள்ள தெங்கம்புதூரில் மறைந்த ஹெச். வசந்தகுமாா் நினைவு மெளன ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
பகிர்:

நாகா்கோவில் அருகேயுள்ள தெங்கம்புதூரில் மறைந்த ஹெச். வசந்தகுமாா் நினைவு மெளன ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊா்வலத்துக்கு காங்கிரஸ் கட்சியின் குமரி கிழக்கு மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில் வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த் மற்றும் காங்கிரஸாா் கலந்து கொண்டனா். பின்னா் செய்தியாளா்களிடம் விஜய வசந்த் கூறியது: எனது தந்தை மீது பற்று வைத்திருந்த அனைவரும் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதி ஊா்வலம் நடைபெற்றது.

அரசியலில் ஈடுபடுவதற்கும், தோ்தலில் போட்டியிடுவதற்கும் இப்போது எனக்கு விருப்பம் இல்லை. குடும்பத்தினரிடம்

கலந்து ஆலோசித்த பின்னா் முடிவை அறிவிக்கிறேன். கன்னியாகுமரி மக்களவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெறும். தந்தை விட்டு சென்ற பணிகளை ஒரு மகனாக குடும்பத்தில் ஒருவனாக தொடா்ந்து செயல்படுத்துவேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.