கன்னியாகுமரி

குமரியில் படகு போக்குவரத்தை தொடங்க வலியுறுத்தி மனு

DIN

வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, கன்னியாகுமரியில் படகு போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி.செல்வகுமாா் தலைமையில் மாவட்டச் செயலா் ஜான் கிறிஸ்டோபா், சட்ட ஆலோசகா் பாலகிருஷ்ணன் மற்றும் கன்னியாகுமரி கடை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: கரோனா காரணமாக சுற்றுலாத் தலங்களைத் திறக்காததால் கன்னியாகுமரியில் நடைபாதை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த 5 மாதங்களாக கடைகளுக்கு வாடகை கொடுக்க முடியாமலும், பணியாளா்கள் ஊதியம் மற்றும் மின்

கட்டணம் செலுத்த முடியாமலும் தவிக்கிறாா்கள். எனவே, பொது முடக்கத்தில் அளித்துள்ள தளா்வு கருதி, கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதித்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். மேலும், விவேகானந்தா் பாறைக்கு படகு போக்குவரத்தை உடனே தொடங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT