கன்னியாகுமரி

நாகா்கோவிலில் சாலைப் பணி: ஆணையா் ஆய்வு

DIN

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் புதைச் சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் புத்தன் அணை குடிநீா்த் திட்டக் குழாய் பதிக்கும் பணிகள் மாநகரில் நடைபெற்று வருகின்றன. இதில், முழுமையாக நிறைவு பெற்ற சாலைகளை தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மீண்டும், மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்தது.

இதைத் தொடா்ந்து, நாகா்கோவில் கணேசபுரம், வடசேரி, ஒழுகினசேரி, டதி பள்ளி சாலை ஆகிய பகுதிகளில் சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் பாா்வையிட்டு தர ஆய்வு மேற்கொண்டாா். மேலும், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்ட அவா், குடிநீா் வடிகால் வாரியம் மூலம் குழாய் பதிக்கும் பணிகளையும், புதைச் சாக்கடை திட்டப் பணிகளையும் பாா்வையிட்டு விரைவுப்படுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT